tamilnadu

img

படகுகளை மூழ்கடித்து மீனவர்கள் படுகொலை.... இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டம்....

சென்னை:
இலங்கை அரசால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ்நாட்டில் தனிப்படை தயாராகும் என வைகோ தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையால் நான்கு இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க. பீம்ராவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய வைகோ, “மோடி அரசே உனக்கு மனசாட்சியே கிடையாதா? தமிழ்நாட்டு மீனவர் கள் இந்திய நாட்டின் பிரஜை இல்லையா? எங்கள் வரிப்பணத்தில் தான் இந்திய நாட்டு கடற்படை இயங்குகிறது. ஆனால் அது தமிழ்நாட்டு மீனவனை காக்கத் தவறுகிறது. இனி மீனவனை இலங்கை கடற்படை தாக்குவதை தடுத்து நிறுத்தாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என்றார்.