17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்தவகையில் ஒன்றிய அரசு பணியிலிருந்து திரும்பிய அஸ்ரா கார்க் தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் மண்டல ஐஜியாக இருந்த அன்பு சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, வடக்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர காவல் ஆணையர் துரைக்குமாருக்கு பதிலாக சந்தோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகர காவல் ஆணையராக ஐஜி டி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஐ.ஜியாக மல்லிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் காவலர்கள் நலப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டன்டாக ஏடிஜிபி ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் காவல்துறை நடவடிக்கைகள் பிரிவு ஏடிஜிபியாக பால நாகதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒன்றிய அரசு பணியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஆயுஷ்மணி திவாரிக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி மகேஸ்வர் தயாளுக்கும் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி சுமித் சரண், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக உள்ள அபின் தினேஷ் மோடக்குக்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐஜி சஞ்சய்குமார் கூடுதல் டிஜிபியாக காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
என்.கே. செந்தாமரைக்கண்ணன் கூடுதல் டிஜிபியாக சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐஜியாக உள்ள வி.வனிதா சென்னையில் ரயில்வே பணியில் ஏடிஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.