சென்னை,நவம்பர்.09- சென்னையிலுள்ள ரிப்பன் மாளிகையை பொதுமக்கள் சுற்றிப் பார்க்கும் வகையில் சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
111 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையை விரும்புவோர் commcellgcc@gmail.com என்ற இமெயில் மற்றும் 9445190856 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விண்ணபிக்கலாம் என அறிவிப்பு.
ரிப்பன் மாளிகையின் கட்டுமான வரலாறு, சென்னையின் வரலாறு, மாநகராட்சி இயங்கும் முறை ஆகியவற்றை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.