tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

பங்குச் சந்தையில் முதலீட்டாளர்

கணக்குகள்  24 கோடியாக உயர்வு சென்னை, நவ.14 தேசிய பங்குச் சந்தை யில்  (என்எஸ்இ) உள்ள  முதலீட்டாளர்களின் வர்த்தக கணக்குகள் 24 கோடியாக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டு அக்டோ பர் மாதத்தில் 20 கோடி என்ற அளவை எட்டியதிலிருந்து ஏறக்குறைய ஒரு ஆண்டு கால அளவில் இந்த உயர்வு நிகழ்ந்துள்ளது. பங்குச் சந்தையில் வெவ்வேறு தரகர்களிடம் முதலீட்டா ளர்கள் கணக்குகளை வைத்திருக்கலாம்; இதன் காரணமாக ஒரே நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் குறியீடு கள் இருக்கக்கூடும். இதன டிப்படையில் 4 கோடிக்கும் அதிகமான முதலீட்டாளர் கணக்கு களுடன் (17% பங்கு) மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக் கிறது. அதைத் தொடர்ந்து உத்திரப்பிரதேசம் (2.7 கோடி, 11% பங்கு), குஜராத் (2.1 கோடி, 9% பங்கு, மேற்கு வங்கம் (1.4 கோடி 6% பங்கு), மற்றும் ராஜஸ் தான் (1.4 கோடி, 6% பங்கு) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்து இருக்கின்றன. 

மாணவர்களுக்கு எம்.எல்.ஏ. வழங்கிய மேசை, நாற்காலிகள்

காஞ்சிபுரம், நவ.14- காஞ்சிபுரம் மாநகராட்சி 30-வது வார்டில் உள்ள யாகசாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு, அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், ரூ.3.12 லட்சம் மதிப்பீட்டில் 25 மேசை மற்றும் நாற்காலிகளை வழங்கினார். போதிய தளவாடங்கள் இல்லாததால் மாணவர்கள் அவதிப்பட்ட நிலையில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2025-26-ன் கீழ் அவர் இந்தப் பொருள்களை வழங்கினார். குழந்தைகள் தினமான வெள்ளியன்று (நவ.14) நடைபெற்ற பொருள்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. எழிலரசன் பங்கேற்று, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், அவர் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

பாழடைந்த கட்டடத்துக்குள் வீசப்பட்ட  ஆண் சிசு சடலம்

சென்னை, நவ. 14- சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் பாழடைந்த கட்டடத்துக்குள் வீசப்பட்ட  ஆண் சிசு சடலத்தை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலம்பாக்கம் ஈச்சங்காடு சிக்னல் அருகே ஒரு பாழடைந்த கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் இருக்கும் பகுதியில் தூய்மை பணியாளர்கள், சுத்தம் செய்யும் பணி யில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த கட்டடத்தின் சுவர் அருகே ஒரு பிளாஸ்டிக்  பையில் 5 மாத ஆண் சிசு சடலம் பொதியப்பட்டு வீசப்பட்டிருப்பதை பார்த்து தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், மேடவாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று ஆண் சிசு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அங்கு ஆண் சிசு சடலத்தை வீசிச் சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.'

கல்லூரிக்கு செல்ல மறுத்த மகன்: தாய் தற்கொலை

சென்னை, நவ. 14- சென்னை வேளச்சேரியில் மகன் கல்லூரிக்கு செல்ல மறுத்ததினால், தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேளச்சேரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பானுமதி (38). இவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு  தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பானுமதி, அங்கு மகன், மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்த பானுமதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த வேளச்சேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று, பானுமதி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.