சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒரே கோரிக்கை மனுவை மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படுவதை காணமுடிகிறதுஎனவே தமிழ்நாடு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து குறைகளை விரைந்து களைவதற்கு கண்காணிக்க ஒரு சிறப்பான அமைப்பு முறை தேவைப்படுகிறது.எனவே பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து அவற்றிற்கு தீர்வு காண ஒரு குறை தீர்ப்பு மேலாண்மை திட்டம் அமைப்பதற்கான அவசியத்தை உணர்ந்து “முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம்” ஒன்றை அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு விரைந்து தீர்வு காணப்படும்” என்றார்.
இந்த திட்டம் முதல் கட்டமாக தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் ரூ.12.78 கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் முதல்கட்டமாக 100 இருக்கைகள் கொண்ட உதவி மையமாக செயல்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.