சென்னை:
கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவிவரும் நிலையில் திங்களன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாதமுழு ஊரடங்கு அமல்படுத்தப் படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் இயங்கலாம். பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம். இதை தவிர்த்து பிற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காலை 10 மணி வரை கடைகள் திறந்து இருந்த நிலையில், அதன் பிறகு அவசியமின்றி வெளியில் வந்தவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால்தான் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனவே சனிக் கிழமை அரைநாள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் முழுவதும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் கடை வீதிகளில் கூட்டம் அலை மோதியது. காய்கறி கடைகள், மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.
அடங்காத மக்கள் கூட்டம்...
ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப் படுவதால் மக்கள் அவதி படக்கூடாது என்பதற்காக நல்லெண்ணத்தின் அடிப்படையில், திறந்து வைக்கவும் விற் பனை நேரத்தையும் அதிகரித்து தனிமனித இடைவெளிவிட்டு நெருக்கடி இல்லாமல் பொருட்களை வாங்கிச் செல்லவும் பேருந்துகளில் பயணம் செய்து சொந்த ஊர்களுக்கு செல்லவும் அரசு ஏற்பாடு செய்தது.தமிழகம் முழுவதும் கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை பார்க் கும்போது கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சமும் கவலையும் ஏற்படுகிறது.இக்கட்டான இந்த சூழலை பயன்படுத்தி வியாபாரிகள் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்தனர். குறிப்பாக பத்து ரூபாய்க்கு விற்பனை செய்த தக்காளி 100 ரூபாய்க்கும் ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்த கேரட் பீன்ஸ் 300 ரூபாய் வரையிலும் தங்கள் விருப்பம் போல் விலையை உயர்த்தி விற்பனை செய்தனர். ஐந்து ரூபாய்க்குக் கிடைத்த கொத்தமல்லி புதினா கட்டு கூட 50 ரூபாய் முதல் விற்பனை செய் யப்பட்டது.
இதுமட்டுமல்லாமல் மளிகைப் பொருள் கள் விலையும் மீன், கோழி, ஆட்டுக்கறியின் விலையும் பன்மடங்கு உயர்த்தி விற்பனை செய்தனர். சென்னை மாநகரம் மட்டுமின்றி மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இதேநிலைமை நீடித்தது. இது குறித்து ஏராளமானபுகார் அரசுக்கு சென்றது.இந்த நிலையில், காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. மேலும் காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது மக்களை சுரண் டும் செயல். உயர்த்தப்பட்ட காய்கறி விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும். இல்லையெனில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அரசு, காய்கறிகள் அதிக விலைக்கு விற்பது தொடர்பாக ஆய்வு செய்ய அலுவலர்களுக்கு உணவுத்துறை அமைச்சர் அரங்க.சக்கரபாணி அறிவுறுத்தினார்.