இந்தியன் வங்கி லோக்கல் ஆபிசர் பதவிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழ்நாடு தேர்வர்களுக்கு மாநிலத்திற்குள் தேர்வு மையம் ஏற்பட்ட செய்ய வலியுறுத்தி சு.வெங்கடேசன் எம்,பி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்தியன் வங்கி லோக்கல் ஆபிசர் பதவிக்கான தேர்வுகள் 10.10.2024 அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மையங்கள் இருந்தும் இங்கே மையங்கள் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு ஹைதராபாத், பெங்களூர், மைசூர் என்று தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்துள்ளனர்.
வரும் 11, 12 தேதிகளில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, நவராத்திரி விழா நேரம். 13 ஆம் தேதி வங்கி தேர்வாணைய நியமனத் தேர்வு வேறு உள்ளது.
இத்தகைய கடும் நெருக்கடியில் தேர்வர்கள் என்ன செய்வார்கள்? போக்குவரத்து, தங்குமிடம், தேர்வுக்கான மன நிலை எல்லாமே சிக்கல் ஆகாதா?
தமிழ்நாடு தேர்வர்களுக்கு உடனடியாக மாநிலத்திற்குள் மாற்று தேர்வு மையம் ஏற்பாடு செய்ய வேண்டி இந்தியன் வங்கி தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.