tamilnadu

img

விடுதலை நாள் விழா புதுச்சேரி கோலாகலம்! தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் ரங்கசாமி

விடுதலை நாள் விழா புதுச்சேரி கோலாகலம்! தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி, நவ.1 – பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி விடுதலை பெற்ற புதுச்சேரி மாநிலத்தின் விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியேற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பை பார்வை யிட்டார். விடுதலை நாள் வாழ்த்து உரை வாசித்த பின்னர், முன்னாள் ராணுவ வீரர்கள், காவல்துறையின் பல்வேறு பிரிவுகள், பள்ளி மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.  ஜவகர் சிறுவர் இல்ல மாணவர்கள், காந்தாரா கலைக்குழு, மாமல்லன் வீர விளையாட்டு கழகம், நடன பள்ளி மற்றும் சத்ரியா அகாடமி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சபாநாயகர் செல்வம், துணை சபா நாயகர் ராஜவேலு, சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆறு முகம், லட்சுமிகாந்தன், பாஸ்கர், செல்வம், தீப்பாய்ந்தான், ரமேஷ், சாய்சரவணக்குமார், சிவ சங்கரன், தலைமைச் செய லர் சரத்சவுகான், டிஜிபி ஷாலினி சிங், அரசு அதி காரிகள், தியாகிகளின் வாரிசுகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.