tamilnadu

img

100 நாள் வேலை 150 நாளாக உயர்த்த மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு கோரிக்கை

100 நாள் வேலை 150 நாளாக உயர்த்த   மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு கோரிக்கை

செய்யூர், நவ.1 – தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்  திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட 5வது மாநாடு செய்யூர் வட்டம் பவுஞ்சூரில் தோழர் டி.லட்சுமணன் நினை வரங்கத்தில் 2  நாட்களாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம்.வெள்ளி கண்ணன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், வரவேற்பு குழு பொருளாளர் ஜி.ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட குழு உறுப்பினர் சுப.சேகர் சங்கக் கொடி யேற்றினார். மாநிலத் தலைவர் டி.வில்சன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.தாட்சாயணி வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் எ.குமார் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநாட்டை மாநில துணைத்தலைவர் பி.எஸ்.பாரதி அண்ணா, பொதுநல மருத்துவர் பானுகோபனார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் க.ஜெயந்தி, தமுஎகச மாவட்டத் தலைவர் கவிசேகர், சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் கலைச்செல்வி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் க.புருஷோத்தமன், சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.தாட்சாயணி, கே.லிங்கன் உள்ளிட்ட பலர் பேசினர். சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் நிறைவுரை ஆற்றினார். வரவேற்பு குழு செயலாளர் எஸ்.சதீஷ் நன்றி கூறினார் தீர்மானங்கள் 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தவும், தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்தவும் வேண்டும்,மாற்றுத்திறனாளி உதவித் தொகையை ஆந்திர மாநிலம் போல் ரூ.6,000, ரூ.10,000, ரூ.15,000 ஆக உயர்த்த வேண்டும்,செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமிடத்தை அருகாமையில் மாற்ற வேண்டும்,ஆடியோகிராம் பரி சோதனைக்கு கூடுதல் பரிசோதனையாளர் நியமிக்க வேண்டும்,கட்டணமில்லா பேருந்துகளை அதிக அளவில் இயக்க வேண்டும், தாயுமானவர் திட்டத்தில் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வீடு தேடி ரேஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் தேர்வு  தலைவராக எஸ்.தாட்சாயணி, மாவட்ட செயலாளராக எம்.வெள்ளிகண்ணன், பொருளாளராக வி.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 29 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.