tamilnadu

img

2 அமைச்சர்கள், 7 எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு.....

சென்னை:
தமிழகத்தில் இதுவரை பதவி ஏற்காத இரண்டு அமைச்சர்கள் உட்பட எம்எல்ஏக்கள் 9 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் சட்டப்பேரவையில் பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

இரண்டு நாட்கள் இம்மாதம் 11, 12 தேதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தின்போது உடல்நலக் குறைவு மற்றும் பல்வேறு காரணங்களால் திமுக தரப்பில் அமைச்சர்கள் எஸ்.எஸ். சிவசங்கரன், மதி வேந்தன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் 6 பேரும், அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும் பதவி ஏற்கவில்லை.இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் திங்களன்று மே 24 பேரவைத்தலைவர் அறையில் 9 பேருக்கும் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.‌ இதில் திமுக சார்பில் சிவசங்கர்,  மதிவேந் தன்,  காந்திராஜன், வரலட்சுமி, வெங்கடாசலம் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம்,  விஜயபாஸ்கர் , கடம்பூர் ராஜு, இசக்கி சுப்பையா பதவியேற்றுக் கொண்டனர்.இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகன் உள் ளிட்டோர் கலந்து கொண்டார்.சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் திமுக எம்எல்ஏ சண்முகையா மட்டும் இன்னும் பதவியேற்க வில்லை.