தமிழகத்தில் இரு மொழிக்கொள்கைதான் தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த மோடி தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது. மோடி அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஊடகங்களிடம் கூறியதாவது
8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய முடிவை எடுப்பார். தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் நடைமுறையில் இருக்கும். இருமொழிக் கொள்கையை தான் தொடர முடியும் என மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார் என கூறினார்.