tamilnadu

img

குடிபோதையில் ஒரே வாகனத்தில் வேகமாக சென்ற 4 பேர்

சென்னை:

மயிலாப்பூரில் குடிபோதையில் நான்கு இளைஞர்கள் ஒரே பைக்கில் அதிவேகமாக வந்து, அடுக்குமாடி குடியிருப்பின் கேட்டிற்கும் மரத்திற்கும் இடையே மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 


சென்னை பட்டினபாக்கம் பகுதியில் உள்ள நொச்சி நகரை சேர்ந்த 22 வயதாகும் வெங்கடேசன் என்பவர் திருவான்மியூரில் உள்ள ஐடி கம்பெனியில் எலெக்ட்ரிக்கல் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.இவர் ஞாயிறன்று இரவு 11.30 மணியளவில் டிராவல்ஸ் நிறுவன ஊழியரான தனது உறவினர் விஷ்ணு மற்றும் நண்பர்கள் பாவாடைராயன் மற்றும் பாரதிராஜா ஆகியோரோடு இருசக்கர வாகனத்தில் மயிலாப்பூர் பாபநாசன் சிவன் சாலையிலிருந்து சாந்தோம் சாலையை நோக்கி வேகமாக சென்றுள்ளார்.

அப்போது சாலையில் இருந்த வேகத்தடை சரியாக தெரியாததால் அதன் மீது ஏறி இறங்கிய போது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறமாக இருந்த நடைபாதையின் மீது ஏறி, அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரும்பு கேட் மற்றும் மரத்திற்கு நடுவே மோதி உள்ளது. பைக் இடித்த வேகத்தில் பைக்கை ஓட்டிச்சென்ற விஷ்ணு தூக்கி வீசப்பட்டு கேட்டின் மறுப்பக்கம் விழுந்துள்ளார்.


இந்த விபத்தில் விஷ்ணுவும், வெங்கடேசனும் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் முத்து மற்றும் பாரதிராஜா ஆகியோருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வழியாக ஆட்டோவில் வந்த ஒருவர் சாலையில் ரத்த வெள் ளத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீ சார், காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக ராயபேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவர்களின் உடல் பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் குடிபோதையில் இருந்ததும், பைக் ஓட்டி வந்த விஷ்ணு ஹெல்மெட்டை தலையில் அணியாமல் வந்ததும் தெரியவந்தது.