tamilnadu

img

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, புதிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, 

கால்நடைத் துறை செயலாளராக இருந்த கார்த்திக், உயர் கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் இளம் பகவத்துக்கு, கூடுதல் பொறுப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த கார்த்திகேயன், நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீத்தா ஹரீஷ் தக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சாலைத் திட்ட இயக்குநர் அண்ணாதுரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிய கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநராக இருந்த பிரபாகர் தாஸ், நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலாளராக இருந்த மங்கத் ராம் சர்மா, மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணை மேலாண் இயக்குநராக (நிதி) விஷு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்ய தனி அதிகாரியாக சுப்பையன் நியமிக்கப்பட்டுள்ளார்.