சென்னை, ஆக. 1- தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக் கையில், நுகர்பொருள் விநியோக ஆணையராக இருந்த மதுமதி சமூக நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்புத் திட்ட இயக்குநர் கண் ணன் நுகர்பொருள் விநியோக ஆணையராக நியமனம் செய் யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தி ருக்கிறார். அருங்காட்சியக இயக்குநர் கவிதா ராமு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்புத் திட்ட இயக்குனராகவும் பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை செயலாள ராக இருந்த ஆபிரகாம், சமூக நலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். பொதுப்பணித்துறை செயலா ளர் பிரபாகர், நெடுஞ்சாலைத் துறைக்கும் சமூகநலத்துறை செய லாளர் மணிவாசன், பொதுப் பணித்துறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.