tamilnadu

img

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெண்கள் அமைப்புகள் முன்னிற்க வேண்டும் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு அழைப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெண்கள்  அமைப்புகள் முன்னிற்க வேண்டும்  ஐஏஎஸ் அதிகாரி  சுப்ரியா சாகு அழைப்பு

சென்னை, மார்ச் 19- நிதானமான மற்றும் நிலையான உலகைக் கட்டியெழுப்புவதில் இந்திய வர்த்தகம்  மற்றும் தொழிற் கூட்டமைப்பின் மகளிர் அமைப்பு  (‘ஃபிக்கி எஃப்.எல்.ஓ) போன்ற பெண்கள் அமைப்புகள் முன்மாதிரியாகத் திகழ முடியும் என தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்தார். சென்னையில் நடை பெற்ற அந்த அமைப்பின் “தலைமை மாற்றம் 2025–2026” விழாவில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று அவர் பேசுகையில், “சுற்றுச்சூழலைப் பாது காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. நாம் எடுக்கும் ஒவ்வொரு சிறிய நடவடிக்கையும் சுற்றுச்சூழலைப் பாதிக் கும் அல்லது பாது காக்கும் வலிமை கொண்டது. அனைவரும் ஒருமித்த நோக்கத்துடன் செயல்பட்டால் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடி யும்” எனக் குறிப்பிட்டார். சென்னை கிண்டியில் நடைபெற்ற இந்த விழா வில், 2025–26 ஆம் ஆண்டிற்கான தலைவராகப் பணியாற்றிய நியாதி ஏ. மேத்தா தனது பதவிக்கால சாதனைகளைத் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, 2026–27 ஆம் ஆண்டிற் கான புதிய தலைவராக டாக்டர் அமுல்யா ராவ் பொறுப்பேற்றார். அவர் பேசுகையில், கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டில் பெண்களின் பங்களிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே தனது இலக்கு என்றார்.