சென்னை:
ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப் பட்ட நிலையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை எவ்வாறு நடைபெறும் என குழுப்பம் நிலவி வந்தது.இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு அனைத்துப் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப் பட்டுள்ளன. இந்நிலையில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை குறித்து கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.இதுதொடர்பாகச் சென்னை, தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறும் போது, ‘’தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக் னிக் கல்லூரிகள் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.கொரோனா காரணமாக இந்த ஆண்டு மாணவர்கள் 11ஆம் வகுப்பில் எந்த அடிப்படையில் சேர்க்கப்படுவார்களோ, அதே அடிப்படையில் முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்” என்றார்.அதாவது, கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை நடைபெறும் என்றும் அமைச்சர் கூறினார்.அண்ணா பல்கலைக்கழக மாணவர்களைப் போலவே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளன. பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் நிலுவையில் உள்ள அரிய தேர்வுகளை எழுத அரசு சலுகை வழங்குகிறது. ஒரு பருவத் தேர்வுக்கு 250 ரூபாயும், எந்த பேப்பர் எழுதுகிறார்களோ அதற்கு மட்டும் 65 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தினால் மட்டுமே போதும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.சேலம் பெரியார் பல்கலைக் கழகம், காமராசர் பல்கலைக் கழகம், அண்ணாமலை பல் கலைக் கழகம் ஆகிய 3 பல் கலைக் கழகங்களில் நியமனத்தில் தவறுகள் நடந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கலந்து பேசி, ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும்.பொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் உயர் கல்வி சேர்க்கையை நடத்தலாம் என்பது குறித்து விவாதிக் கப்பட்டு வருகிறது. முதல்வரிடம் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்.பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் மாணவர் சேர்க்கைக் கான விதிமுறைகளை வகுக்க, குழு அமைத்து ஆய்வு செய்து வருவதாக அமைச் சர் பொன்முடி தெரிவித்தார்.