tamilnadu

தமிழ்நாட்டில் உயர் ரத்த அழுத்தத்தை அறியாத 46 விழுக்காட்டினர்

சென்னை, ஆக.22 தமிழகத்தில் 46 விழுக்காட்டினர் தங்களுக்கு உயர் ரத்தஅழுத்தம் இருப்பது குறித்து அறியாமல் இருக்கிறார்கள் என இந்திய இதய ஆய்வு தெரிவிக்கிறது. 2293 பேரிடம் இந்த ஆய்வு   மேற்கொள்ள ப்பட்டது. ஆய்வில் பங்குகேற்ற 25.1 விழுக்காட்டினருக்கு   உயர் ரத்த அழுத்தம் இருப்பதும், ஆனால் அவர்கள் அது குறித்து அறிந்திருக்கவில்லை என்பதும் தெரியவந்தது. கண்டறியப்பட்டிருக்கிறது. 20.8 விழுக்காட்டினருக்கு  மருத்துவச் சூழல் இல்லாத, வழக்கமான சூழலில் வீட்டில் பரிசோதிக்கப்பட்ட போது  உயர் ரத்த அழுத்தம்  இருப்பது தெரியவந்தது. 20.2 பேருக்கு மருத்துவ சூழலில் பரிசோதி க்கப்பட்ட போது உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தது.  மற்ற நாடுகளைப் போல் இல்லாமல், இந்தியர்களுக்கு காலையில் இருப்பதை விட மாலை நேரங்களில் அதிக ரத்த அழுத்தம் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதனால் இந்த ஆய்வு முடிவு,  உயர் இரத்த அழுத்த த்திற்கான மருந்தை எந்த நேரத்தில் உட்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நேரத்தை மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஸ்டான்லி மருத்து வக் கல்லூரி முன்னாள் பேராசிரியரும் பில்ராத் மருத்துவமனையின் இதயநோய் நிபுணருமான   டாக்டர். எஸ். சண்முக சுந்தரம் கூறினார். ’ரத்த அழுத்தத்தின் அளவை சில நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிப்பதை ஒரு பழக்கமாகவே வைத்துக் கொள்வது அவசியம். இதன் மூலம் ரத்த அழுத்த அளவு எந்தளவிற்கு அதிகம் மாறுபட்டு இருக்கிறது என்பதை கண்டறியமுடியும் என்று டாக்டர். என். சிவகடாக்ஷம் கூறினார்.