tamilnadu

உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை

சென்னை, மே 11- உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வெப்பம் அதிகரிக்கும் என்றும், 100 டிகிரி பாரன்`ஹீட்டுக்கு அதிகமாக வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் வெப்பம் அதிகமாக பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.வெப்பச்சலனம் காரணமாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் உள் ளிட்ட 14 உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திற்கு காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் பிளவக்கல்லில் 4 சென்டிமீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய இடங்களில் தலா 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.