tamilnadu

ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 சென்னை, அக்.3- சேலம், கோவை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்  டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான பகுதி களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், தென்தமிழகம் அதை ஒட்டியுள்ள  பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  உள்ளதால் ஒரு சில இடங்களில் லேசானது  முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென் னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.