சென்னை:
குடும்ப அட்டைதாரர்கள் வாங்காதமளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரேசன் கடைகள்மூலம் ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. இதில்1 லட்சத்து 82 ஆயிரத்து 197 குடும்பஅட்டைதாரர்கள் பெறாமல் உள்ளனர்.
அவர்களது மளிகை தொகுப்பினைகொனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு வழங்க உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை வருமாறு: 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை 15.6.21 முதல் 31.7.2021 வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. 1,82,197 குடும்ப அட்டைதாரர்கள் பெறாமல் உள்ளனர். எனவே, மீதமுள்ள மளிகை பொருட்களின் தொகுப்புகளை குடிசை பகுதிகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள, குணமடைந்த மக்களின்குடும்பங்கள், அரசு மனநல காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், தொழு நோயாளிகளுக்கான காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு வழங்க அனுமதியளிக்கப்படுகிறது.மேலும் ஆட்சியர் , துணை ஆணையாளரின் விருப்புரிமை அடிப்படையில் பொது நல அரசு சார் மற்றும்அரசு சாரா அமைப்புகளில் தங்கி பயன்பெற்று வரும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளின் அடிப்படையிலான விகிதாச்சாரத்தின்படி அவர்களது குடும்பங்களுக்கு வழங்க அனுமதியளிக்கப்படுகிறது. குடும்பங்களுக்கு வழங்கியதற்கு ஒவ்வொரு பயனாளிகளிடமிருந்தும் கையொப்பம் பெற்று அறிக்கையாக தொகுத்து அனுப்ப வேண்டும். இதேபோல், தொகுப்பு குடும்பம் ஒன்றுக்கு ஒன்று மட்டுமே வழங்க வேண்டும். தொகுப்பில் காலாவதியாகிய பொருட்கள் எதுவும் இல்லாததை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்தஇறுதி அறிக்கையை செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.