சென்னை:
கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில், 2020 - 2021ஆம் ஆண்டிற்கான மருத்துவ உளவியல் பாடப்பிரிவில் ஆய்வியல் நிறைஞர் பட்ட படிப்புக் கான மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் 12ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தெரி
விக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 2020 - 2021ஆம் ஆண்டிற்கான மருத்துவ உளவியல் பாடப்பிரிவில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான மாணவர் சேர்க்கை, 2021, ஜன.,12ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த படிப்பிற்கான வரையறுக்கப்பட்ட காலம் இரண்டு ஆண்டுகள்.இந்த படிப்பில் சேர்வதற்கான தகவல் தொடர்பு அறிக்கை விண்ணப்பப் படிவங்கள், கூடுதல் தகவல்களை, www.tnhelth.tn.govt.in அல்லது www.medicalselection.org என்ற வளைதள முகவரியில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.இந்த படிப்பிற்கான விண்ணப்பப் படிவங்களை. 2020, டிச., 27ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவையான தகுதிச் சான்றுகளை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங் களை, செயலாளர், தேர்வுக் குழு மருத்துவ கல்வி இயக்ககம், 162. ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை -600010 என்ற முகவரிக்கு, 2021, ஜன.,5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இதற்கான நுழைவுத் தேர்வு, ஜன., 8ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை சென்னை, கீழ்பாக்கம், மேடவாக்கம் குளச்சாலையில் உள்ள அரசு மனநல காப்பத்தில் வைத்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.