சென்னை, மே 10 -அகவிலைப்படி உயர்வு வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டு 1.1.2019 முதல் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அறிவித்த 15 நாட்களுக்குள் தமிழக அரசும் அறிவிப்பது வழக்கம். ஆனால் தமிழக அரசு அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணையை வெளியிடாமல் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று கடந்தகாலங்களில் அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது.எனவே, மூன்று விழுக்காடு அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணையை வெளியிட வேண்டும், ஜனவரி - ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாத கால அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.தென்சென்னையில், சேப்பாக் கம், வேளாண்மை பொறியியல் துறை (நந்தனம்), பனகல் மாளிகை, டிஎம்எஸ், மோட்டார் வாகன பராமரிப்பு மையம், புள்ளி விவர தொகுப்பு மையம், வேலைவாய்ப்புத்துறை ஆணையரகம், வணிக வரித்துறை அலுவலகம் உள்ளிட் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டங்களில் மாநிலப் பொதுச் செயலாளர் மு.அன்பரசு, மாவட்டத்தலைவர் டேனியல் ஜெயசிங், செயலாளர் வெங்கசேடன், பொருளாளர் புகழேந்தி, நிர்வாகிகள் சுமதி, வெற்றிச்செல்வன், வினோத்குமார், கோவிந்தராஜன், நம்பிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வடசென்னை3 விழுக்காடு அகவிலைப்படி வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வடசென்னை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.குறளகம் பகுதிக்குழு சார்பில் ராஜீவ் அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில், சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், எழும்பூர் பகுதிக்குழு சார்பில் தொல்லியல் துறை வளாகத்தில், கன்னிமாரா நூலகத்தில், தங்கசாலை ஐடிஐ வளாகத்தில், அம்பத்தூர் ஐடிஐ வளாகத்தில், சிவில்சப்ளை அலுவலகவளாகத்தில், ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட நிர்வாகிகள் ம.அந்தோணிசாமி, சுந்தரம்மாள், கேசவன், செல்வராணி, ஏழுமலை, அன்சர்பாஷா, வி.விஜயகுமார், மோகன்தாஸ், பத்மநாபன், ராமசாமி, வேல்பாண்டி, சிவக்குமார், மாரிராஜ், சீனிவாசன், கிருஷ்மூர்த்தி, மோகன், கோபிநாதன், உமாராணி ஆகியோர் பங்கேற்று பேசினர்.