districts

img

தேர்தல்கால வாக்குறுதிகளை நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றுக சென்னையில் அரசு ஊழியர்கள் போராட்டம்

சென்னை, ஏப்.19 - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் பாக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறை வேற்ற வலியுறுத்தி புதனன்று (ஏப்.20) சுமார் 20 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதிய ஒன்றிய திட்டத்தை ரத்து செய்து  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத் தப்படும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் (சுமார் 3.50 லட்சம்) ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அளித் திருந்தது. அந்த வாக்குறுதிகளையும் நடப்பு  சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நிறை வேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. வடசென்னை மாவட்டத்தில் குறளகம்,  எழும்பூர், தங்கசாலை, ஆவடி - அம்பத்தூர்,  சென்னை மாநகரட்சி உள்ளிட்ட 10 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாநிலச் செயலாளர் அன்னாகு பேரன், மாவட்டத் தலைவர் சுந்தராம்பாள், செயலாளர் அந்தோணிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தென்சென்னை மாவட்டத்தில் அடை யாறு, கிண்டி, டிஎம்எஸ், டிபிஐ, சைதை, நந்தனம் உள்ளிட்ட 8 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர்கள் ச.டேனியல் ஜெயசிங்,  உ.சுமதி, மாவட்டத் தலைவர் சி.கலைச் செயலாளர், செயலாளர் ந.வினோத்குமார், ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.