சென்னை:
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராடும் அரசு ஊழியர்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசை இந்திய ஜனநாயகவாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
4.50 லட்சம் காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தைக் கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு முழுமையாக ஆதரிக்கிறது.மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து சில ஆண்டு காலமாகவே அரசு ஊழியர் சங்கம் பல கட்ட போராட்டங்களை நடத்தி அரசின்கவனத்திற்கு கொண்டு வந்திருக் கிறது. ஆனாலும் அரசு அவர்களைஅழைத்துப் பேசாமல் அலட்சியப் படுத்தி வருகின்றது. அரசுக்கு பல கடிதங்கள் எழுதியிருக்கிறது. ஆனாலும் அரசின் அலட்சியப் போக்கு தொடர்வது கவலைஅளிக்கின்றது. அரசு ஊழியர்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மை யுடன் செயல்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கொரோனா பேரிடர் காலத்திலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ள ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.எனவே போராடுகின்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை தமிழக அரசு உடனடியாக அழைத்துப் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தைநடத்தாமல் அவர்களை ஒடுக்கு வதற்கான நடவடிக்கைகளைக் கையாளுவது ஜனநாயக விரோத மாகும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளனர்.