tamilnadu

img

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஆய்வுக்கூட்டம்....

சென்னை:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி என்.சிவகுமார் தலைமையில் சென்னையில் மாவட்ட துணை மேலாளர்கள் மற் றும் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு வருமாறு:-

இந்த கூட்டத்தில் மாவட்டம் மற்றும் வட்டம் வாரியாக வழங்கப்பட்டுள்ள செட் டாப் பாக்ஸ்களின் விவரம். அவற்றில் இயக்கத்தில் உள்ளவை, கடந்த ஆறு மாதங்களில் புதிதாக வழங்கப்பட்ட செட் டாப் பாக்ஸ்கள் எண்ணிக்கை, அதே காலத்தில் இயக்கத்தில் இல்லாததால் திரும்ப பெற்றவை குறித்த விவரம், செட் டாப் பாக்ஸ் இயக்கத்திற்கு கொண்டுவராமல் உள்ள உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் மற்றும் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள  செட் டாப் பாக்ஸ் விவரம், 

கடந்த இரண்டு மாதங்களில் கட்டணம் செலுத்தாமல் உள்ளவை, மறு இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்ட செட் டாப் பாக்ஸ்களின் எண்ணிக்கை, இயக்கத்தில் இல்லாததால் பறிமுதல் செய்யப் பட்டவை மற்றும் இலக்கு ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.இது தவிர உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பு விவரம் அரசு இ-சேவை மற்றும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களின் செயல்பாடு மற்றும் கடந்த இரண்டு மாதங்களில் வழங்கப்பட்ட சேவை 
கள் விவரம் ஆகியவையும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.