செஞ்சி வாரச்சந்தையில் ரூ.3கோடி வரை ஆடுகள் விற்பனை
ரம்ஜான் பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ள தால் செஞ்சியில் ஆட்டு சந்தை இன்று காலையில் கலை கட்டியது. இந்நிலை யில், இன்று அதிகாலை 3 மணி முதலே விவசாயி கள், தங்களது வளர்ப்பு ஆடுகளையும், வியா பாரிகள், வெளி மாவட்டத்தி லிருந்து வாங்கி விற்கும் ஆடுகளையும் விற்பதற்காக கொண்டு வந்தனர், ஏராளமான வியா பாரிகள் அதை வாங்கிச் செல்வதற்காக வாகனங்க ளில் செஞ்சி வாரசந்தைக்கு வந்திருந்தனர். மேலும், விற்பனைக் காக சுமார் 10 ஆயிரம் ஆடு கள் வரை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர். குறிப்பாக வரும் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட இருப்பதால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த வார ஆட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் விற்பனை யானது. இதனால் சுமார் ரூபாய் 3 கோடி வரை ஆடு கள் விற்பனையானது.
தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை, மார்ச் 29- சென்னையில் ஆப ரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை (மார்ச் 29) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.66,880க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.8,360க்கு விற்பனையானது.