சென்னை
இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் 2-ஆம் கட்ட ஊரடங்கு கடந்த ஏப்ரல் 2-வது வாரத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில், கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மே 17-ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு சூழ்நிலைக்கு ஏற்ப அந்தந்த மாவட்டங்களில் ஊரடங்கு விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளன.
இந்நிலையில், திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நாளை ஒரு நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாது. மருத்துவமனைகள், மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் மட்டும் செயல்படும். எனினும் பால் பொருட்கள் கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்தத்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.