அரியலூர்
ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தைகளுள் ஒன்றான சென்னை கோயம்பேடு சந்தை தமிழகத்தின் கொரோனா மையமாக மாறியுள்ளது. இந்த சந்தையால் சென்னை மாநகரம், புறநகர் மட்டுமின்றி திருவள்ளூர், செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரியலூரில் இன்று ஒரே நாளில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலர் சென்னை கோயம்பேட்டிலிருந்து அரியலூருக்குச் சென்றவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே அங்கு 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 202 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 சிறுவர்களும் அடங்கும்.
குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர் ஆகிய மாநகரங்களை பின்னுக்குத்தள்ளி மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள அரியலூர் மாவட்டம் டாப் ஆர்டருக்கு முன்னேறியுள்ளது.