tamilnadu

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்: அதிமுக

சென்னை,நவ.24 சென்னையில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் ஞாயிறன்று  அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில்  நடைபெற்றது.  கூட்டத்திற்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாள ரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள்  பங்கேற்றனர். பொதுக்குழுவில்  தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை களை ஏற்று ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும், இலங்கை தமிழர்கள் சமஉரிமை பெற்ற குடிமக்களாக வாழ்வதை உறுதி செய்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். கீழடியில் பெறப்பட்ட தமிழர்க ளின் பண்பாட்டு அடையாள ங்களை காட்சிப்படுத்த புதிய அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாராட்டு தெரிவித்தும்,  சுற்றுச்சூழலு க்கும், மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை ஒழித்த அதிமுக அரசுக்கு பாராட்டு தெரிவித்தும் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவில் பேசிய முதலமைச்சர் டிடிவி தினகரன் குடும்பம் அதிமுகவை பாடாய்படுத்தியது என்று கூறினார். ஆனால் சசிகலா குறித்து அவர் ஏதும் பேச வில்லை.2021 ஆம் ஆண்டு தேர்தலை அதிமுக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை யில் எதிர்கொள்ளும் என்றும் அமைச்சர் தங்கமனி பேசினார்.