சென்னை:
தேர்தல் வாக்குறுதிகளை கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தது உண்மைதான் என்று ‘சேம்சைடு கோல்’ அடித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.திமுக அரசின் தமிழக நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கைகள் மீது திங்களன்று (ஆக.16) தொடங்கியது. விவாதத்தை துவக்கிய அதிமுக உறுப்பினர் உதயகுமார், “ 2011 ஆம் ஆண்டில் ரூ. 1 லட்சம் கோடி கடன் சுமையோடுதான் அதிமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது என்றும் இன்றைய நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றப்படவில்லை என்றும் சமூக நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத் தோம். விலையில்லா அரிசியை வழங்கினோம், முதியோர் உதவித் தொகையை உயர்த்தித் கொடுத்தோம் என்று கூறினார்.
ஒவ்வொரு காலக் கட்டத்திலும் பணத்தின் மதிப்பு, பண வீக் கம் மாறுபடும். அதை வைத்துகொண்டு பேசுவது சரியான வாதமாக இருக்காது. உற்பத்தியில் ஒரு மாநில அரசின் கடன் தொகைஎவ்வளவு என்பதான் மிக மிக முக்கியமானது. ஆனால், முந் தைய ஆட்சியில் திட்டங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டது. நிதி ஒதுக்கப்படவில்லை. முதியோர் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டாலும் தகுதியற்றவர்கள் என்று கூறி லட்சகணக்கில் பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டி உதயகுமாரின் கோல் முயற்சிக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு மாறி மாறி பதிலளித்தனர்.உதயகுமாரைத் தொடர்ந்து, திமுக ஆட்சியில் சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் மட்டுமே 18,000 பேர் முதியோர் ஓய்வூதிய பயனாளிகளாக திமுக ஆட்சியின்போது சேர்க்கப்பட்டனர். இவர்களில் தகுதியில்லாத நபர்களைதான் கடந்த அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டது என்றும் திமுக ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று அறிவிக்கப்பட்டதை முழுமையாக நிறைவேற்றப்பட்டதா? என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.தகுதியில்லாதவர்கள் என்றால் அதற்கான உத்தரவு வழங்கிய அதிகாரிகள் மீது அடுத்துவந்த அதிமுக அரசு நடவடிக்கை எடுக் காதது ஏன்? என்று அமைச்சர்கள் கேள்வி எழுப்பினர்.
தனது உரையை நிறைவு செய்யும் முன்பு ஆர்.பி. உதயகுமார், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தாமதப்படுத்தவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா? என கேள்விஎழுப்பினார்.அதுவரைக்கும் அமைதிகாத்திருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், “நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தந்த வாக்குறுதிகள், உறுதிமொழிகளை நாங்களும் மறக்கவில்லை. மக்களும் மறக்கவில்லை. அவற்றில் பலவற்றை நீங்கள் நிறைவேற்றவில்லை என் பதை மறந்துவிடக் கூடாது.உதாரணத்திற்கு இலவச செல்போன் தந்தீர்களா? ஆவின் பால் குறைத்தீர்களா? ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் இலவசமாக கொடுத்திருக்கிறீர்களா? குறைந்த விலையிலே, அவசியமான மளிகைப் பொருட் கள் கொடுக்கப்பட்டதா? அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை கொடுத்தீர்களா? கோ-ஆப் டெக்ஸ் துணிகள் வாங்க ரூ. 500க்கு கூப்பன் தந்தீர்களா?அனைத்துப் பொது இடங்களிலும் வை-பை செய்து தரப்பட்டதா? டாக்டர் அம்பேத்கர் பவுன்டேஷன் அமைத்தீர்களா? பட்டு-ஜவுளிப் பூங்காவை உருவாக்கியிருக்கிறீர்களா? சென்னையில் மோனோ-ரயில் விடப்பட்டதா? இப்படி பெரிய பட்டியலே இருக்கின்றது. உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை என்று ஒருபோடுபோட்டார்.முதலமைச்சர் கூறியது அனைத்தும் உண்மைதான் மறுப்பதற்கில்லை என்று அமைச் சர் உதயகுமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.