சென்னை:
நடிகை சாந்தினி அளித்த புகாரில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண் டனை ஞாயிறன்று காவல்துறையினர் கைது செய்தனர்.நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப் படையில் அடையாறு காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ள வழக்கில் முன் ஜாமீன் அளிக்க கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு கடந்த 16 ஆம் தேதி தள்ளுபடியானது.இதையடுத்து மணிகண்டனை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். மதுரைக்கு சென்று விசாரணை நடத்தி வந்த நிலையில், பெங்களூரில் நண் பர் ஒருவரது பண்ணை வீட்டில் மணிகண் டன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தனிப்படைகாவல் துறையினர் மணிகண்டனை கைதுசெய்தனர்.நடிகை சாந்தினி அளித்த புகாரில் மணிகண்டன் தன்னுடன் குடும்பம் நடத்தியது அவரது பாதுகாவலர், கார் ஓட்டுநர், வீட்டு வேலைக்காரர் ஆகியோருக்கு தெரியும் என்று தெரிவித்து இருந்தார். இதன் படி அவர்களிடம் போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தினர்.
அதே நேரத்தில் தனக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவரின் பெயர், மருத்துவமனையின் விவரங்களையும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார். கடந்த சில நாட்களாக இது தொடர்பான ஆதாரங்களை போலீசார் முழுமையாக திரட்டி வைத்து இருந்தனர். அந்த அடிப்படையில் தான் மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மணிகண்டன் அளித்த தகவல்களை போலீசார் வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர்.முந்தைய அதிமுக ஆட்சியின்போது இராமநாதபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மணிகண்டன் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பணிபுரிந்தார்.நடிகை சாந்தினி மலேசிய சுற்றுலா வளர்ச்சி கழக தூதரக கழகத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போதுதான் அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.பாலியல் வழக்கில் முன்னாள் அமைச் சர் கைது செய்திருப்பது அதிமுகவுக்கு பலத்த அடியை கொடுத்திருக்கிறது.