tamilnadu

img

உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிதி உதவி

சென்னை, ஜூலை 6- பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடானது ஜூலை 4ஆம் தேதி தொடங்கி நாளை வரை சிகாகோ நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை நடத்த நிதி உதவி கோரி, உலக தமிழ் ஆராய்ச்சி மன் றம், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது. இதன் அடிப்படையில், மாநாட்டிற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அர சாணை வெளியிட்டுள்ளது. இதேபோல் இந்த மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்கும் 20 பேர், சிகாகோ சென்று வர விமா னக் கட்டணம் உள்ளிட்ட பிற செல வினங்களுக்கு 60 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள் ளது. இந்த மாநாட்டிற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் மாநில அரசு முடிவெடுக்க முடியாமல் திணறியது.கடந்த காலங்களில் அப்போதைய முதல் வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இந்த மாநாட்டிற்கு நிதிஒதுக்கியுள்ளதை சுட்டிக்காட்டி தற்போதுள்ள அதிமுக அரசும், அவர்கள் வழியில் செயல்படவேண் டும் என்று தமிழறிஞர்களும் பல் வேறு எழுத்தாளர் சங்கத்தினரும் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து விரைவில் இந்த நிதி ஒதுக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் பண் பாட்டுத்துறை அமைச்சர் பாண்டிய ராஜன் அறிவித்திருந்தார்.