சென்னை, ஏப்.20- சென்னையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகின. சென்னை மாதவரத்தில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. குடோனின் ஒரு பகுதியில் பிடித்த தீ, மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் குடோனில் கரும்புகை எழுந்தது. ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து பற்றி தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 5 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.