சென்னை,பிப்.18- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் வங்கக் கடலில் உருவான "ஃபெஞ்சல் புயல்" காரணமாகப் பெய்த கனமழையால் திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குரிச்ச், தருமபுரி உட்பட 18 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.498.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஓரிரு நாட்களில் நிவாரணத் தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு