பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடகாவில் தேவனகுந்தி வரை பைப் லைன் புதைக்க நிலத்தை கையகப்படுத்த உள்ளது. இந்த பணிக்கு அந்த நிறுவனம் தயார் நிலையில் உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல ஊர்களில் விவ சாயிகளுக்கு சர்வே எண் குறிப் பிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் அலுவ லகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த விவ சாயிகள், கொதிப்படைந்துள்ளனர். அதைப்பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை வட்டம் உத்தனப் பள்ளி அருகே அயரணப்பள்ளி ஊராட்சி முதல் உல்லட்டி, சாம னப்பள்ளி, துப்புகானப்பள்ளி வரைக்கும். சூளகிரி வட்டத்தில் அட்டகுறுக்கி, காமன்தொட்டி, பாத்த கோட்டா, புக்கசாகரம், ஆளுர், முத்தாளி, வனப்பள்ளி, காருப்பள்ளி, நந்திமங்கலம், படுதே பள்ளி, முகுலப் பள்ளி அலச் பள்ளி தேவிரப் பள்ளி, பாலி கானப் பள்ளி என 26 ஊர்களில் சுமார் 1500 சர்வே எண்களில் 50 கிலோ மீட்டர் தூரம் பைப் லைன் அமைக்க உள்ளனர்.
இந்த திட்டத்திற்காக 1962 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்த சட்டப்படி நிலத்தை எடுக்கப் போவ தாக கடந்த 29 ஆம் தேதியிட்ட கடிதம் அனைத்து சர்வே எண் தாரர் களுக்கும் அனுப்பப்பட்டு ள்ளது. இது குறித்து 21 நாட்களுக்குள் ஆட்சேபனை, இருந்தால் கூறலாம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவ லகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், சம்மந்தப்பட்ட விவசாயி களில் பலர் கொதிப்படைந்தும், ஒரு சிலர் குழப்பத்திலும் உள்ளனர். இண்டு ஏக்கர் முதல் 30 சென்ட் வரை உள்ள நிலம் (சுமார் 70 அடி அகலத்திற்கு 50 கிலோ மீட்டருக்கு கையகப்படுத்தப்படலாம்) நடுவில் பைப் லைன் சென்றால் இரண்டாகப் பிரிக்கப்படும். அப்போது மீதி மிருக்கம் நிலம் என்னாகும்? பைப் லைனை தாண்டி பிரிக்கப்பட்ட பாதி நிலத்திற்கு எப்படி கிணற்று நீரை வாய்க்கால், குழாய் மூலம் எடுத்துச் செல்வது?
ஏற்கனவே பல கிலோ மீட்டர் தூரம் அரசுப் பள்ளிகளுக்கு நடந்தே சென்று வரும் கிராம குழந்தைகள் இதை தாண்டி சென்று வர முடி யுமா? ஊர்களுக்கு செல்லும் சாலை கள் பயன்படுத்த முடியுமா? காய்கறி கள், தானியங்கள், விரகுகள்,வீடு கட்டும் பொருள்களை ஏற்றிச் செல்ல முடியுமா? இரு சக்கர , நான்கு சக்கர, கனரக வாகனங்கள், இதைத் தாண்டி சென்று வர முடியுமா? என்பது இது ஒருபுறம் இருக்கிறது. நிலத்தின் உரிமையாளர் அனு மதியில்லாமல் நிலத்தை எடுக்கக்கூடாது என்கிறது 1962 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் பயன்பாட்டுச் சட்டம். ஆனால், நிலத்தின் உரிமையாளருக்கு தெரி யாமல் எப்போது, எப்படி சர்வே செய்யப்பட்டது? இந்த பைப் லைனில் கசிவு, மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது? பைப் லைனுக்கு எடுக்கப்ப டும் நிலம் யார் உரிமையில் இருக் கும்? இந்த திட்டம் மத்திய அரசுக்கா, தனியாருக்கா? எப்போது துவங் கப்படும்? திட்டத்தின் பயனாளிகள் யார்? பசுமையான சிறு விவசாய நிலங்களை நாசப்படுத்துவதற்கு பதில் கேரளாவைப் போல தமிழ கத்திலும் சாலை ஓரங்களில் குழாய் பதித்து திட்டத்தை நிறைவேற்ற முடி யாதா? என்பதுதான் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடமும் எழுந்திருக்கும் கேள்விகளாகும்.
இதே பிரச்சனைக்காகாக தரும புரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஜூலை மாதம் 21 ஆம் தேதி 500க்கும் மேற்பட்டவர்கள் போராட்டம் நடத்தினர். இத்திட் டத்திற்கு தங்களின் அனுமதியில்லா மல் நிலத்தை எடுக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். தகவலறிந்த தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், சூளகிரி வட்டச் செயலா ளர் முனியப்பா, தலைவர் எம்.எம். ராஜூ, துணைத் தலைவர் சீனி வாசன், முருகேசன் ஆகியோர் அந்த பகுதிகளுக்கு சென்று பாதிக்கும் விவசாயிகளை சந்தித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் மாவட்டத் தலைவர் முனிசாமி, தேன்கனிக் கோட்டை வட்டச் செயலாளர் அனுமப்பா, சந்திரசேகர், நஞ்சுண் டன், முருகேசன், சாந்தகுமார், கோவிந்தன், ராஜப்பா, நாராய ணப்பா ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றனர். விவசாயி களை சந்தித்தனர். காமன் தொட்டி, சூளகிரி சாமனப்பள்ளி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதி களில் ஊர்கூட்டமும் நடை பெற்றது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயி கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் கேட்டு உடனடியாக சம்மந் தப்பட்ட கோவை அலுவலகத்திற்கு மனு அனுப்புவது என்றும், தொடர்ந்து வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி பாதிக்கப்பட்ட விவசாயி களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மறுப்பு தெரி வித்து மனு அளிக்க இருப்பதாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவித்தனர்.