tamilnadu

img

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு


சென்னை, ஏப்.14-
ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் மின் கட்டணம் செலுத்த மே 6 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
கொரோனா தொற்று பரவுதலால் மார்ச் 24 ஆம் தேதி நள்ளிரவு, முதல் ஊரடங்கு அமல்படுத்தி யதன் காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர் களின் இடர்ப்பாடுகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களின் மின்னிணைப்புகளுக்கு, மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான இறுதி நாள் மார்ச் 25 முதல் ஏப்.14 ஆம் தேதி வரை இருக்கு மாயின், அதற்கான தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு அல்லது மறு இணைப்புக் கட்டணமின்றி ஏப்.14 ஆம் தேதி வரை கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட் டிருந்தது. இப்போது ஊரடங்கு உத்தரவும் மேலும் நீட்டிக்க பட்டுள்ளதால் மே  6 ஆம் தேதி வரை கட்டணம் செலுத்தலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.