முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 14 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுவதாக ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உயர்கல்வி துறையில் காலியாக உள்ள 2,207 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு தொடர்பான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கெனவே வெளியிட்டிருந்தது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மழை காரணமாக இணையம் மூலம் விண்ணப்பிப்பதில் சிரமம் உள்ளதால் நவம்பர் 14-ஆம் தேதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.