tamilnadu

img

சென்னைக்கு அருகில் உற்சாகமான படகு சவாரி!

சென்னை மற்றும் புற நகர் பகுதி மக்கள் விடு முறையின் போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் சிறந்த தேர்வுகளில் முட்டுக்காடு படகு குழாம் ஒன்றாகும்.  கிழக்கு  கடற்கரை சாலையில் அமைந் துள்ள முக்கிய சுற்றுலா தலங் களில் ஒன்றாக இது உள்ளது. முகத்துவாரம் வழியாக தண்ணீர் வங்கக் கடலில் கலப்பதை  பார்த்து ரசிப்பதே தனி அழகுதான்.  காலை 9 மணி முதல் மாலை 6 மணி  வரை திறந்திருக்கும் இங்கு படகு சவாரி செய்ய சென்றதும்,மரத்தடி நிழலில் குளுகுளு காற்றுடன் படகுகள் சீறிப்பாய்ந்து செல்வதை பார்ப்பதும் தனி மகிழ்ச்சி தான்.  வித விதமாக... தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அமைத்திருக்கும் படகு  சவாரி இல்லத்தில் வாட்டர் ஸ்கூட்டர் என குடும்பத்துடனும் நண்பர்களுடன் பொழுதை போக்க லாம்.

நாம் பயணிக்கும் தூரம் குறைந்த அளவே இருந்தாலும்,  அங்குள்ள ஸ்பீட் படகுகள்.  மோட்டார் படகுகள் வாட்டர் ஸ்கூட்டர் ஆகிய  படகுகளில் பயணிப்பது சுகம் தான். படகில் பயணம் செய்யும் பொழுது  ஒரு சாகச உணர்வையும்  உணர முடியும். மேலும் இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக மிதவை படகு கள் இயந்திர படகுகள் சாகச முறை யில் இயக்கப்பட்டு வருகிறது. வாட்டர் ஸ்கூட்டரில் பயணிக்கும் இளசுகள், படகில் வேக வேகமாக   திருப்பும் போது செய்யும் சாகசம் (exciting) அற்புதமான காட்சிகளாகும். மேலும், ரோ (Row Boat) படகுகளில்  மிதமான வேகத்தில் நீண்ட நேரம் தண்ணீரில் மிதப்பது அதிக உற்சாகம் கொடுக்கிறது. படகு சவாரி செல்ல வேண்டாம், படகு சவாரி செய்யும்  அழகை மட்டும் ரசித்தால் போதும் என்ப வர்கள் பத்து ரூபாய் நுழைவு கட்ட ணம் செலுத்தினால் போதும். படகு  இல்லம், படகு சவாரி செய்யும் அழகை ரசிக்கலாம்.  3 பேர் செல்லக்கூடிய துடுப்பு படகு 30 நிமிடங்களுக்கு  ரூ.350, 4 பேர் செல்லக்கூடிய துடுப்பு படகு 30 நிமிடங்களுக்கு ரூ.450, 2 பேர் செல்லக்கூடிய வாட்டர் ஸ்கூட்டர் ஐந்து நிமிடங்கள்  1000 ரூபாய், 3  பேர் செல்லக்கூடிய விரைவு படகுகள் 10  நிமிடங்கள் 1200   ரூபாய், 6  நபர்கள் பயணிக்க கூடிய  மோட்டார் படகுகள் 20 நிமிடங்கள் 1050   ரூபாய், 10 நபர்கள் பயணிக்க  கூடிய மோட்டார் படகு  20 நிமிடங்கள் 1300 ரூபாய் வசூலிக் கிறார்கள். குழந்தைகள் குதூகலம்! இங்கு 150 ரூபாயில் இருந்து குழந்தைகளை கவரும்  மெய்நிகர்   விளை யாட்டுக்களும் உள்ளது. நிச்சயம் குழந்தைகளுக்கு புதுவித அனு பவத்தை தருகிறது.  அது போக படகில் பயணம் செய்யும் போது, கேமராவில்  புகைப்படம் எடுத்து கொடுக்கப்படுகிறது. அதற்கான கட்டணம் 100 ரூபாய் மட்டுமே. மிதவை உணவகம் ! முட்டுக்காட்டில் படகு சவாரிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும்  வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக தமிழகத்தின் முதல் மிதக்கும் சொகுசு கப்பல் உணவகம் தயாராகி விட்டது. 5 கோடி ரூபாய் செலவு உருவாகி இருக்கும் மிதவை கப்பல், சுமார் 15 அடி நீளம் 25 அடி அகலமும் கொண்டதாகும்.

இரு அடுக்குகளை கொண்ட இந்த உணவகத்தின் தரை தளம்  முழுவதும் ஏசி வசதி கொண்டது. முதல் தளம் திறந்த வெளியாக மேல் தளத்தில் அமர்ந்து உணவு  சாப்பிட்டுக் கொண்டே இயற் கையை ரசிக்கும் படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக்  கப்பலின் மேல் தளத்தில் அமர்வ தற்கு இருக்கை வசதிகளுடன்  கம்பீரமாக அழகுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த மிதவை கப்பல் உடன் புகைப்படம்  எடுப்பதில் சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்ற னர். கேரள மாநிலம், ஆலப்புழா படகு சுற்றுலா மையத்தில், பேக்  வாட்டரில் படகு செல்லும் போது,  அழகு நம்முடன் தவழ்ந்து மிதந்து வரும். அத்தகைய ரம்யமான சூழல் கிடைக்காது என்றாலும், தமிழ் நாட்டில் முதன் முதலாக உருவாக் கிய மிதக்கும் உணவகம் விரை வில் சுற்றுலாப் பயணிகளின் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கோடை விடுமுறை மட்டுமல்ல எப்போது வேண்டுமானாலும் முட்டுக்காடு படகு இல்லத்திற்கு செல்லலாம். சென்னையில் இருந்து  வருபவர்கள் ஈ.சி.ஆர் வழியாக வரும் பேருந்துகளில் வரலாம். பிற பகுதிகளில் இருந்து வருப வர்கள் திருப்போரூர் அல்லது    கேளம்பாக்கம் பேருந்து நிலையத் திலிருந்து பேருந்தில் வரலாம்.மாநகர பேருந்துகள் படகு குழாம்  அருகே நிற்கிறது. சொந்த வாகனங்களில் வருபவர்களுக்கு பார்க்கிங் வசதியும் உள்ளது.  சி. ஸ்ரீராமுலு