tamilnadu

img

தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே மாதத்தில் தேர்வுகள் நடைபெறும்  

தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்தில் இறுதி தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இதனால் நேரடி தேர்வுகளும் நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

அதனைதொடர்ந்து மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 10 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதத்தில் பொதுத்தேர்வு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  மேலும் நடப்பு ஆண்டில் மட்டும் மே மாதத்தில் இறுதித்தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.