கடலூர், நவ.11- கடலூர் மாவட்டம் திருப்பாதிரி புலியூரில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையரை சந்தித்த கட்சியின் நகரச் செயலாளர் ஆர். அமர்நாத், மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன், திருப்பாதிரிபுலியூர் லாரன்ஸ் சாலையில் ரயில் நிலை யம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. கட லூர் நகராட்சிக்குபட்ட வண்டிப்பா ளையம், மார்க்கெட் காலனி, திருப் பாதிரிபுலியூர் மற்றும் அருகே உள்ள வடுகப்பாளையம், கேப்பர்மலை, பாதிரிக்குப்பம், அரிசி பெரியாங் குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரன்ஸ் சாலையில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட் டதால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்லும் பிரதான வாயில் முடக்கப்பட்டது. இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆட்டோ, அவசர ஊர்தி என வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பிரசவத்துக்காகவும், அவசர சிகிச்சைக்கா கவும் இங்கு வருவோரின் எண்ணிக்கை கணிச மாகக் குறைந்தது. இதனால், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை மக்கள் பாதிப்புக்குள்ளாகி வரு கின்றனர். எனவே, மருத்துவமனைக்குச் செல்வதற்கு பிரதான வாயிலை ஏற்படுத்தித் தர வேண்டும். ரயில் நிலையத்துக்குச் செல்லும் பழைய பாதையில், முடக்கப்பட்டுள்ள பாதையை சரி செய்து திறந்து விடு வதன் மூலம் ஆரம்ப சுகாதார நிலை யத்துக்கு வழி கிடைப்பதுடன் பொது மக்களின் பயன்பாட்டுக்கும் எளி தாக இருக்கும். இந்தப் பிரச்சனைகள் தொடார் பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது. மேலும், இது தொடர்பாக வருகிற 27-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. குடியிருப்போர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.மருத வாணன், பான்பரி மார்க்கெட் வியா பாரிகள் சங்க நிர்வாகிகள் பக்கி ரான், சேகர், நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.