tamilnadu

img

மின்தடை ஏற்பட்டுள்ள இடங்கள் இன்று இரவுக்குள் சீரமைக்கப்படும் – அமைச்சர்  

மின்தடை ஏற்பட்டுள்ள இடங்கள் இன்று இரவுக்குள் சீரமைக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.  

சென்னை – தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக தீவிர கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வேகமாக வலுப்பெற்று வருகிறது.

இந்த நிலையில் தியாகராயர் நகர், எழும்பூர், அம்பத்தூர் உள்ளிட்ட 41 இடங்களில் மின்மாற்றிகள் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4,000 கள பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 10 மாவட்டங்களில் 12ஆயிரம் மின் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழைஅளவு அதிகமாக இருந்தாலும் மின்வாரியம் எதிர்கொள்ள தயாராக உள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.