ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 29 வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தவோ, வெளியிடவோ கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 9 ஆம் தேதியும், தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23 ஆம் தேதியும், மேற்குவங்கத்திற்கு ஏப்ரல் 23, 29 தேதிகளிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் 9-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தவோ, அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் வெளியிடவோ கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
