ஈழத்து எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, மதுரையில் புதனன்று மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், ஈழத்து எழுத்தாளர் சுகன் எழுதி, எஸ்ஐடி கல்லூரி மாணவிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த “அன்டச்சபிள்ஸ்” என்ற சிறுகதைத் தொகுப்பு நூலும், மதுரை சிறைத்துறை ஓய்வுபெற்ற அலுவலர் நம்பி எழுதிய, “இருள் கிழித்த செஞ்சுடர்கள்” என்ற நூலும் வெளியிடப்பட்டன.