tamilnadu

img

பாஜகவை போலவே திருவள்ளுவருக்கு காவிசாயம் பூசுகிறார் எடப்பாடி - கனிமொழி எம்.பி!

தாய்மொழி தினத்தை முன்னிட்டு காவி உடை உடுத்திய திருவள்ளுவர் புகைப்படத்தைப் பதிவிட்ட எடப்பாடி பழனிச்சாமிக்குக் கனிமொழி எம்.பி கண்டங்களை தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்; பாஜக மீதான விசுவாசம் திரு. எடப்பாடி பழனிசாமியை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார் எனப் பதிவிட்டுள்ளார்.