tamilnadu

img

பத்திரிகையாளர் நல வாரியத்தில் தாலுகா செய்தியாளர்களையும் இணைக்கவேண்டும் டியுஜெ திருவண்ணாமலை பேரவை தீர்மானம்

பத்திரிகையாளர் நல வாரியத்தில் தாலுகா செய்தியாளர்களையும் இணைக்கவேண்டும்  டியுஜெ திருவண்ணாமலை பேரவை தீர்மானம்

திருவண்ணாமலை, ஜன.5- மறைந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (டியூஜெ) சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.  திருவண்ணா மலை மாவட்ட தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் செய்யாறில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திருவண்ணாமலை மாவட்ட  டியூஜெ தலை வரும் மாநில பொருளாளருமான வந்த வாசி ரவிச்சந்திரன் தலைமை தாங்கி னார். மாநில மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் போளூர் சுரேஷ், மாவட்ட செயலாளர் எம்.தனஞ்செயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணைச் செயலாளர் பி.நடராஜன் வர வேற்றார். இந்நிகழ்வில் மறைந்த பத்திரி கையாளர் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.மாவட்ட தலைவர் வந்த வாசி ரவிச்சந்திரன், மறைந்த ஆரணி தின பூமி செய்தியாளர் பி.விஜயபாஸ்கர் குடும்பத்தினருக்கு நிதி உதவியாக 1.40 லட்சம் ரூபாயினை, குடும்பத்தினரிடம் வழங்கினார். மாநில பொதுச் செயலாளர் போளூர் சுரேஷ்,மறைந்த போளூர் தினகரன் செய்தியாளர் என்.ரமேஷ் குடும்பத்தினருக்கு நிதி உதவியாக ரூ.1.50லட்சம் வழங்கினார். உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தவாசி தசரதன் மற்றும் வந்தவாசி வேணுகோபால் ஆகியோருக்கு தலா ரூ.5ஆயிரம்  மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. பேரவையில் டியூஜெ  மாநில நிர்வாகி கள் எம்.தனஞ்செயன், எஸ்.சேது, ஆர்.சுப்பிரமணியன், ப.நடராஜன், ஆர்.வளையாபதி, ஏ.தமிழ்செல்வன், கே.முத்து, பி.ஆர்.வேலாங்கன், ஆர்.முருககனி, ஏ.ஆர்.லட்சுமணன், மாவட்டநிர்வாகிகள் ம.மீ.ஜாபர் (சென்னை), பெ.ரூபன், வி.பி.கோவிந்தராஜலு(திருவள்ளுர்),கல்யாணசுந்தரம், அழகேசபாண்டியன்(வேலூர்), வி.விஸ்வநாதன், எஸ்.வினோத்குமார் (தருமபுரி) ஆகியோர் பங்கேற்றனர்.மாவட்ட பொருளாளர் தே.சாலமன் நன்றி கூறினார்.