சென்னை, ஏப்.26-சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ப.தனபாலை வெள்ளிக்கிழமை (ஏப். 26) சந்தித்து அரசு கொறடா ராஜேந்திரன் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் செய்தியாளர் களை சந்தித்த ராஜேந்திரன், “அதிமுகவுக்கு எதிராக ஆர்.பிரபு (கள்ளக்குறிச்சி), வி.டி. கலைச்செல்வன் (விருத்தாசலம்), ஏ.ரத்தினசபாபதி (அறந்தாங்கி) ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதனால், அந்த மூன்று பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள் ளேன்” என்றார்.நான் கொடுத்த மனுவை பரிசீலனை செய்து 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் சட்டப்பூர்வமாக உரிய நடவடிக்கையை மேற் கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராஜேந்திரன், “சம் பந்தப்பட்ட 3 சட்டமன்ற உறுப் பினர்கள் கட்சிக்கு எதிராக கலந்து கொண்ட விழாக்கள் அடங்கிய படங்கள், அது தொடர்பான ஆதாரங்களை கொடுத்திருக்கிறேன். ஆரம்பத்தில் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு கடந்த ஆண்டு அக்டோபர் ஒரு மனு கொடுத்தேன். இப்போது மேலும் சில ஆதாரங்கள் (டிடிவி அணியில் சேர்ந்திருக்கிறார்கள். அந்த கட்சியில் பதவி வாங்கியிருக்கிறார்கள்) இதையும் இணைத்து மனு கொடுத்திருக்கிறேன் என்றார்.இந்த மூன்று பேர் மீது இப்போதைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அதிமுகவுக்கு தோல்வி பயமா? என்றும் சட்டமன்றத்திற்குள்தான் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்க முடியும். சட்டமன்றத்திற்கு வெளியில் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கமுடியுமா? என்று கேள்விக்கு பதில் அளிக்கையில், “ இப்ப நடவடிக்கை எடுத்திருக்கும் மூன்று எம்எல்ஏக்களும் பல நாட்களாக டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பேரவைத் தலைவருக்குதான் உள்ளது. அவர் நடவடிக்கை எடுக்கலாம், எடுக்காமலும் போகலாம். அது பேரவைத் தலைவரின் உரிமை என்றார்.அதிமுக அணியில் வெற்றிபெற்ற தமீமுன் அன்சாரி இந்த தேர்தலில் திமுக அணிக்கு பிரச்சாரம் செய்தார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவீர்களா? என்று செய்தியாளர் கேள்விக்கு இப்போதைக்கு பதில் இல்லைஎன்று அவர் கூறினார்.