டாக்டர் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி சட்டசபை எதிரில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர் நமச்சிவாயம், மதச் சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனர்.
டாக்டர் அம்பேத்கரின் 128வது பிறந்தநாள் விழாவை யொட்டி அவரது சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி பிரதேசத் தலைவர் இராச.செயராமன் தலைமையில் மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர். சிபிஎம் பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம், வெ.பெருமாள், ராமசாமி, நடராஜன், அரிகிருஷ்ணன், ரமேஷ், முனியாண்டி, ஆனந்து, கலைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.