திமுக முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
திமுக தலைமை நிலைய செயலாளரான கு.க.செல்வம், கடந்த 2016 முதல் 2021 வரை திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தார். இதையடுத்து 2020-இல் பா.ஜ.க.வில் சேர்ந்து மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்த கு.க.செல்வம், 2022-இல் மீண்டும் தி.மு.க-வில் இணைந்தார்.
கடந்த சில நாட்களாக கு.க.செல்வம் தீவிர உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், அவர் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.