சென்னை, ஜூன் 17- திரையுலகின் முன்னணி இயக்குநனரான மணிரத்னம் ‘திடீர்’ உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். ‘இதய கோவில்’, ‘இருவர்’, ‘மவுனராகம்’, ‘தளபதி’, ‘அலை பாயுதே’, ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘அஞ்சலி’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘நாயகன்’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமானை ‘ரோஜா’ படம் மூலம் இசையமைப் பாளராக அறிமுகப்படுத்தியவர் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கத்தில் கடந்த வருடம் ‘செக்க சிவந்த வானம்’ படம் திரைக்கு வந்தது. தற்போது கல்கி யின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கான நடி கர்-நடிகை தேர்வில் ஈடுபட்டு வரு கிறார். விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் மணிரத்னத் துக்கு திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் பட உலகிலும், சமூக வலைத்தளத்திலும் பரவி ரசிகர்க ளும், திரையுலகினரும் நலம் விசாரித்த வண்ணம் இருந்தனர். இதனையடுத்து, வயிற்றுக் கோளாறு காரணமாக மணி ரத்னம் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார் என்றும், சிகிச்சை முடிந்து விரைவில் வீட்டுக்கு திரும்பி விடுவார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.