தஞ்சாவூர் ஆக.12- பேராவூரணியில் போக்சோ சட்டத்தில் கைதான குற்றவாளியின் பெற்றோர் மிரட்டிய தில், மனமுடைந்த பெண் விஷமருந்திய நிலை யில் சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அண்ணாநகரைச் சேர்ந்த ஓட்டுநராகப் பணி புரிபவர் சக்திவேல் (28). இவர் கடந்த ஜூலை 31 அன்று மாலை தனது வீட்டருகே விளையா டிக் கொண்டிருந்த, அதே தெருவைச் சேர்ந்த 14 வயது சிறுவனை தனது வீட்டுக்குள் அழை த்துச் சென்று, மிரட்டி வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைத் தொ டர்ந்து, பாதிக்கப்பட்ட அச்சிறுவன் அரசு மரு த்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டான். புகாரின் பேரில், பேராவூரணி காவல்து றையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, சக்திவேலை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில் சிகிச்சை முடிந்து சிறுவன் கடந்த மூன்று தினங்க ளுக்கு முன் வீடு திரும்பினான். தங்களது மகன் போக்சோ சட்டத்தில் கைதானதால் ஆத்திரமடைந்த சக்திவேலின் பெற்றோர் ராஜா, வள்ளிக்கண்ணு ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டைக் கடந்து செல்லும் போதெல்லாம் அவனது பெற்றோ ரை தகாத வார்த்தைகளால் திட்டி, புகாரை வாபஸ் பெற வேண்டும் என்றும், புகாரை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்து விடு வதாகவும் மிரட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில், அச்சிறுவனை சக்திவேல் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றதைப் பா ர்த்ததாக காவல் நிலையத்தில் சாட்சிய மளித்த பக்கத்து வீட்டு பெண் ஜெயசக்தி(27) என்பவரை சக்திவேலின் பெற்றோர் கடந்த நான்கைந்து நாட்களாக தகாத வார்த்தைக ளால் திட்டி, மிரட்டி வந்துள்ளனர். இதனால் ஜெயசக்தி மனமுடைந்த நிலையில் பூச்சி மரு ந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்று ள்ளார். விஷமருந்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெயசக்தியை அக்கம்பக்க த்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகி ச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, ஜெயசக்தியின் கணவர் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், பேராவூ ரணி காவல்துறையினர் விசாரணை மேற்கொ ண்டு, தலைமறைவாகிவிட்ட ராஜா, வள்ளி க்கண்ணு ஆகிய இருவரையும் தேடி வரு கின்றனர்.